விபத்தில் சிக்கி உயிரிழந்த சுகாதார உதவியாளர்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சுகாதார உதவியாளராகக் கடமையாற்றும் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம், ஐயனார் கோயிலடியைச் சேர்ந்த 47 வயதான சுகந்தி உதயகுமார் என்ற பெண்ணே உயிரிழந்தவராவார். இவர் கடந்த முதலாம் திகதி கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது கீழே வீழ்ந்து படுகாயமடைந்தார்.

சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை(மார்ச் 8) அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

Share this Article