யாழ்ப்பாணம் விஞ்ஞான சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விஞ்ஞானப் போட்டிகளுக்கான விண்ணப்பமுடிவுத் திகதி எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணப் பாட சாலை மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொண்டுவரும் வகையில், விஞ்ஞானம் சார்ந்த போட்டிகளாக தரம் 6 முதல் தரம் 13 வரையான மாணவர்களிடையே நிலைபேண்தகு அபிவிருத்தியை நோக்கிய சுற்றுச் சூழல் நேயம்மிக்க புத்தாக்கம் என்னும் தொனிப்பொருளின் கீழ் குறித்த போட்டிகள் நடை பெறவுள்ளன.
வினாடிவினாப் போட்டி, மற்றும் புனைகதைப் போட்டி என்பன நவம்பர் மாதம் 10 ஆம் திகதியும் விஞ்ஞானம் சார் கண்காட்சிப் போட்டி மற்றும் சுவரொட்டிப் போட்டி என்பன நவம்பர் மாதம் 15 ஆம் திகதியும்,பேச்சுப் போட்டி நவம்பர் மாதம் 20 ஆம் திகதியும் விஞ்ஞானக் கட்டுரைப் போட்டி நவம்பர் மாதம் 30 ஆம் திகதியும்,பாடசாலைத் தோட்டப் போட்டி 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையான காலத்திலும் நடைபெறவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த போட்டிகள் தொடர்பான மேலதிக விபரங்களை www.thejsa.org/ssp-2023-24 என்னும் இணையத்தள முகவரியூடாகப் பெற்றுக்கொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.