வாக்களிக்க சென்ற மக்கள் இறங்கு துறைமுகத்தில் காத்திருக்கின்றனர்
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக நெடுந்தீவினை சொந்த இடமாக கொண்டு நெடுந்தீவிற்கு வெளியில் வாழ்ந்த வரும் தீவக மக்கள் வாக்களிப்பதற்கு நெடுந்தீவிற்கு சென்று படகு இன்மையால் 100இற்கு மேற்பட்ட பொதுமக்கள் குறிகட்டுவான் துறைமுகத்தில் காத்திருக்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை 4.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்படவேண்டிய தனியர் படகு மற்றும் இன்று காலை நெடுந்தீவில் இருந்து புறப்பட வேண்டிய தனியார் படகு என்பன சேவையில் ஈடுபடாமையினால் வாக்களிக்க சென்ற மக்கள் இடை நடுவில் காத்திருக்கின்றனர்
காலையில் சேவையில் ஈடுபட்ட குமுதினிபடகு 115 பயணிகளுடன் மீளவும் குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவிற்கு புறப்பட்டுள்ளது. ஆயினும் மீதமுள்ள 100 பிரயாணிகள் இன்னும் குறிகட்டுவான் துறைமுகத்தில் காத்திருக்கின்றனர்
இது தொடர்பாக பிரதேச செயலாளர் பிரதேச சபை தலைவர்ää தேர்தல் அலுவலக இணைப்பாளர் ஆகியோருடன் தொடர்;பு கொண்டு அதற்கமைவாக பிரதேச செயலாளரால் நெடுந்தாரனை படகு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு அப்படகிற்காக மக்கள் காத்திருக்கின்றனர்
காலம் காலமாக நெடுந்தீவு மக்கள்து கடற்போக்குவரத்து இவ்வாறான நிலமைகளிலே காணப்படுவதுடன் தேர்தலில் வாக்கு கேட்டு வரும் அரசியல் வாதிகளும் நெடுந்தீவு வாழும் அரசியல் கட்சி பிரமுகர்களும் இவ்விடயத்தில் அக்கறை கொள்வதாக தெரிவதில்லை மற்றைய நாட்களில் தான் அக்கறை இல்லாவிட்டாலும் தேர்தல் நாளில் ஆவது அக்கறை கொள்ளதா அரசியல் வாதிகளுக்கு வாக்களித்து மக்கள் என்ன செய்வது என காத்திருக்கும் மக்கள் பேசி கொள்கின்றார்கள்