வலைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்ற யாழ் மாவட்டச்செயலக அணி கௌரவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாண மாவட்டச்செயலக அணி சார்பாக பங்குபற்றி வலைப்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கான மெச்சுரை வழங்கும் நிகழ்வு நேற்று (ஒக்ரோபர் 19) காலை 9.30 மணிக்கு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கை அரசசேவை வலைப்பந்தாட்ட சங்கத்தால் பதுளை மாவட்டம் பண்டாரவளையில் நடாத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட சுழற்சி முறை (League), விலகல் முறை (knockout) போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட செயலக அணி சார்பாக பங்குபற்றி 05 போட்டிகளில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கான மெச்சுரை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வீரவீராங்கனைகளுக்கான வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், மெச்சுரைகளையும் வழங்கி வைத்தாா்.

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் , உதவி பிரதேச செயலாளர்கள் , மாவட்ட, பிரதேச செயலக பயிற்றுவிப்பாளர்கள், வெற்றீட்டிய வீரவீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.

Share this Article