நிக்கவரெட்டிய – அம்பன்பொல பிரதேசத்தை சேர்ந்த விஹங்கனா நுவன்த்தி 2022 ஆம் கல்வியாண்டுக்கான உயர்தரப்பரீட்சையில் ஆங்கில மொழியில் தோற்றியிருந்தார்.
கற்றல் நடவடிக்கைகளில் சிறந்து விளங்கிய விஹங்கனா சுகயீனம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார்.
இதன்போது விஹங்கனா நுவன்த்தியின் மூளையை அண்மித்த பகுதியில் சிறிய கட்டியொன்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மூர்ச்சையடைந்திருந்த விஹங்கனா மூளைச்சாவடைந்துள்ளதாக வைத்தியர்கள் அறிவிக்கின்றனர்.
இதனால் விஹங்கனாவினால் தொடர்ந்தும் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்களினால் விஹங்கனாவின் பெற்றோருக்கு அறிவிக்கப்படுகின்றது.
எனினும் விஹங்கனாவின் உடல் அவையங்களை தானம் செய்ய முடியும் எனவும் ஆலோசனை வழங்கப்படுகின்றது. இதற்கமைய விஹங்கனாவின் இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள், ஈரல் ஆகியன தானம் செய்யப்பட்டுள்ளன. அது மாத்திரமின்றி விஹங்கனா நுவன்த்தியின் கண்களும் தானம் செய்யப்பட்டன.
எழுவருக்கு தனது அவையங்களால் வாழ்வளித்த விஹங்கனா நுவன்த்தியின் உயர்தர பெறுபேற்றினையே நீங்கள் காண்கிறீர்கள்.
வர்த்தகப்பிரிவில் ஆங்கில மொழியில் பரீட்சைக்கு தோற்றியிருந்த விஹங்கனா நுவன்த்தி 3 ஏ சித்திகளை பெற்று வியப்பில் ஆழ்த்திவிட்டு இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.