நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் சேவையில் இணைந்து கொண்ட வடதாரகைப்படகு நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுறை நாளாக கணிக்கப்பட்டு சேவையில் ஈடுபடாது என அறியமுடிகின்றது.
இதனால் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை வழமைபோல் காலை 07.30 மணிக்கு நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திரதேவா படகு நெடுந்தீவில் இருந்து புறப்பட்டு காலை 09.30 மணிக்கு நெடுந்தீவு நோக்கி மீளவும் திரும்பும்
தொடர்ந்து மாலை 02.30 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்பட்டு மாலை 04.00 மணிக்கு குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு நோக்கி புறப்படும்.
வடதாரகைப் படகு முன்னர் சேவையில் ஈடுபட்ட போது தொடர்சியாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாரத்தின் ஏழு நாட்களும் தனது சேவையினை வழங்கி வந்தது தற்போது குமுதினிப்படகும் பழுதடைந்துள்ள நிலையில் மக்கள் சேiவியில் ஞர்யிற்றுக்கிழமைகளிலும் சேவையினை வழங்க வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களது கருத்தாக காணப்படுகின்றது.
வடதாரகைப் படகு நாளுக்கு மூன்று சேவைகளை வழங்கும் என கௌர பாரளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டக்களஸ் தேவானாந்த அவர்கள் கருத்து தெரிவித்திருந்த போதும், தற்போது இரண்டு சேவைகள் மாத்திரமே இடம் பெறுகின்றது.