வடக்கில் 213 பாடசாலைகளில் நிரந்தர அதிபர்கள் இல்லை!-தகவல் அறியும் சட்டமூலத்தில் அம்பலம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வட மாகாணத்திலுள்ள 13 எட்டு கல்வி வலயங்களைச் சார்ந்த 213 பாடசாலைகள் நிரந்தர அதிபர்கள் இல்லாமல் இயங்குவதாக தகவல் அறியும் சட்ட மூலத்தில் தெரியவந்துள்ளது.

இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் 13 அதிபர் வெற்றிடங்களும், வலிகாமம் கல்வி வலயத்தில் பன்னிரண்டு வெற்றிடங்களும், வடமராட்சி வலயத்தில் ஆறு வெற்றிடங்க ளும், தென்மராட்சி வலயத்தில் எட்டு வெற்றிடங்களும், தீவக வலயத்தில் இருபத்து மூன்று வெற்றிடங்களும், கிளிநொச்சி தெற்கு வலயத்தில் பதினாறு வெற்றிடங்களும்,கிளிநொச்சி வடக்கு வலயத்தில் ஒன்பது வெற்றிடங்களும், மன்னார் வலயத்தில் இருபத்து ஒன்பது வெற்றிடங்களும், மடு வலயத்தில் இருபத்து ஐந்து வெற்றிடங்களும் , வவுனியா வடக்கு வலயத்தில் பதின்மூன்று வெற்றிடங்களும், வவுனியா தெற்கு வலயத்தில் பதின்மூன்று வெற்றிடங்களும், முல்லைத்தீவு வலயத்தில் பதினேழு வெற்றிடங்களும்,துணுக்காய் வலயத்தில் இருபத்து ஒன்பது அதிபர் வெற்றிடங்களுமாக வடக்கில் மொத்தம் 213 பாடசாலைகள் நிரந்தர அதிபர்கள் இல்லாமல் இயங்குகின்றன.

இந்த நிலையில்,வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் இடம்பெறும் நிர்வாக மற்றும் கையாளுகைப் பிரச்சினைகளுக்கு நிரந்தர அதிபர்கள் இல்லாமை, சில பாடசாலைகளில் இடம்பெறும் மோசடிகளுக்கு காரணமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் முனவைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article