ரயில் முன் பாய்ந்து இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு!- கடன் தொல்லை காரணமா?

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் புகையிரதத்தின் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.

புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் நேற்று (ஓகஸ்ட் 5) மதியம் 2.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

அரியாலை, நெடுங்குளத்தை சேர்ந்த 27 வயதுடைய திலீபன் ஈழப்பிரியா என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரை மாய்த்தார். குறித்த பெண்ணுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.

கணவனுக்கு அதிக கடன் தொல்லையென்றும், அவர் வெளிநாடு செல்வதற்காக டுபாயில் தங்கி நிற்பதாகவும், கடன்காரர்களின் தொல்லை தாங்க முடியாமல் இந்தப் பெண் தற்கொலை செய்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

புங்கன் குளம் புகையிரத நிலையத்தில் துவிச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு குறித்த பெண் தற்கொலை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Article