அநுராதபுரம் – மதவாச்சி வீதியில் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதுடன், பின்னர் தனியார் பேருந்து ஒன்றும் குறித்த பேருந்துகளில் ஒன்றை மோதியதில் பாரிய விபத்தொன்று சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த நபர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது