யாழ் மேலதிக அரசாங்க அதிபருடன் IOM பிரதிநிதிகள் சந்திப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாண மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன் அவர்களுக்கும் IOM  பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (10/03) மேலதிக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக பிரதேச செயலகங்களினால் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட பயனாளிகளின் விபரம் IOM நிறுவனத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டு அவர்களுக்கான கொடுப்பனவிற்கு அனுமதி பெறும் பொருட்டு பயனாளிகளின் விபரம் மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்று தடுத்து வைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டவர்களுக்கான வாழ்வாதார உதவி திட்டம் மற்றும் அவர்கள் தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான IOM நிறுவனத்தின் பிரதானி கிறிஸ்ரின் பாகோ, IOM  நிறுவனத்தின் பிரதிநிதி ரிச்சர்ட், யாழ்ப்பாண மாவட்ட IOM திட்ட இணைப்பாளர் எச். தர்சிகா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன்,  உதவி மாவட்ட செயலாளர் உ. தர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this Article
Leave a comment