யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு தனியான காப்புறுதி திட்டம் – யாழ் அரச அதிபர்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு என தனியான விவசாய காப்புறுதி திட்டம் ஒன்றை பெறுவதற்கான திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு துறை சார் அதிகாரிகளுக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அறிவுறுத்தல் வழங்கினார்

நேற்று  வியாழக்கிழமை (நவம்பர்13) யாழ் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம் பெற்ற மாவட்ட விவசாய மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில்  அவர் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கினார்.

குறித்த கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தில் ஏற்படுகின்ற அனர்த்தத்தின் போது இழப்பீடுகள் தொடர்பில் உரிய முறைகள் பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுடன்

மாவட்டத்தில் அனர்த்தம் ஏற்படும் போது மட்டும் அதை அனத்தமாக பிரகடனம் செய்து இழப்பீடுகளுக்கான சிபாரிசுகள் மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால்  பிரதேசம் ஒன்றில் மட்டும் இயற்கை அனத்தத்தால் விவசாயிகள் பாதிக்கப்படும் போது அதை அனர்த்தமாக மாவட்ட செயலகம் ஏற்றுக் கொள்வதில்லை.  குறிப்பாக வடமராட்சி பகுதியில் அண்மையில்  வீசிய காற்று காரணமாக பயிர்கள் சேதமாகின ஆனால் அதை அனர்த்தமாக அதிகாரிகள் பதிவு செய்யவில்லை என குற்றச்சாட்டுக்கள் இதன்போது முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அனர்த்தத்தின் போது தேசிய ரீதியாக பின்பற்றப்படும் வழிகாட்டல்களுக்கு அமைவாக இழப்பீடுகள் பதிவு செய்யப்படுவது வழமை. எனினும் பிரதேச ரீதியான பாதிப்புகள் ஏற்படும் போது இழப்பீட்டுகளை பெறுவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக துறை சார்ந்த அதிகாரிகள் திட்ட வரைபு ஒன்றை தயாரித்து தாருங்கள் கொழும்புக்கு அனுப்பி அதற்கான விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share this Article