வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளர் மற்றும் வவுனியா மாவட்ட தலைவி சிவானந்தன் ஜெயதா தலைமையில் யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கான புதிய நிர்வாகத் தெரிவு யாழ் – நல்லூர் சிவகுரு ஆதீன மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
புதிய நிர்வாகப் பொறுப்புகளுக்கு பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட தலைவராக
சிவபாதம் இளங்கோதை
செயலாளராக கஜேந்திரகுமார்
பொருளாளராக சத்திய விஜயபாமா
உப தலைவராக விக்னேஸ்வரி
உப செயலாளராக சுதா
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் புதிய நிர்வாகமானது, யாழ். மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக இடம்பெறும் அனைத்துப் போராட்டங்களையும் இனி முழுமையாக முன்னெடுத்துச் செயற்படும் எனவும் தெரிவித்தனர்.