யாழ் மாவட்ட செயலகம் நடாத்தும் பாரம்பரிய உணவுத் திருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

“யாழ். பாரம்பரிய உணவுத்திருவிழா – 2023” என்னும் நிகழ்வு எதிர்வரும் 15, 16 ஆம் திகதிகளில் மாவட்ட செயலகத்தால் யாழ்ப்பாணம் பண்ணைச் சுற்றுவட்டத்தில் நடைபெறவுள்ளது.

யாழ் மக்களிடையே அருகிவரும் பாரம்பரிய உணவுப் பழக்கத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கல், உணவுத்துறை முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை
சந்தைக்கு அறிமுகப்படுத்தல் மற்றும் சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக பாரம்பரிய உணவுத் திருவிழா நடாத்தப்படவுள்ளது.

மக்கள் அனைவரும் இந்த நிகழ்வில் பங்குபற்றி பாரம்பரிய உணவு வகைகளை ருசித்து, பாரம்பரிய
இசையை கேட்டு மகிழுமாறு யாழ்.மாவட்ட செயலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Share this Article