யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்களுக்கு தொழில்சார் உபகரணங்கள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கடற் தொழில்சார் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று(மே 26) யாழ் மாவட்ட நீரியல் வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

கொவிட் நிவாரண உதவியின் கீழ் சேவாலங்கா நிறுவனத்தின் திட்ட அமுலாக்கத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் தலமையில் இடம்பெற்றது.

கடற்தொழில் அமைச்சரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சரின் ஒருங்கினைப்புக் குழு செயலாளர் மற்றும் யாழ்மாவட்ட ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் மாவட்ட, பிரதேச நிர்வாக செயலாளர்கள், பயனாளிகள் மற்றும் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article