யாழ் மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்துள்ளது யாழ்மாநகர சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது
இவ் வரவு செலவுத்திட்டத்தினை இரகசிய வாக்கெடுப்புக்கு விடுமாறு கூட்டமைப்பு கோரியது இதை ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியினர் எதிர்த்தனர்
இதன் பின்னர் பகிரங்க வாக்கெடுப்பு விடப்பட்டது இவ்வாக்கெடுப்பில் ஆதரவாக19 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் பதிவாகின இதனடிப்படையில் 05 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத்திட்டம் தோற்றகடிக்கப்பட்டது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி, என்பன எதிர்த்து வாக்களித்தன தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, சுயேட்சைக்குழு, ஐக்கியதேசியக்கட்சி உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்