யாழ். போதனா வைத்தியசாலையில் தாதியர் பயிற்சி நிலையம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான மேலதிக பயிற்சி நிலையம் நேற்றுமுன்தினம் (மார்ச் 06) திறக்கப்பட்டது.

ஐக்கிய இராச்சிய யாழ் மருத்துவ பீட பழைய மாணவ சங்கத்தின் பல மில்லியன் ரூபா பங்களிப்பில் இந்த நிலையம் அமைக்கப்பட்டது.

நிகழ்வில் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் மருத்துவர் நவநீதன், யாழ் மருத்துவ பீட பீடாதிபதி, வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வடக்கில் இருக்கும் அனைத்து வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான பயிற்சிகளை வழங்கக் கூடியவாறு இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

Share this Article