யாழ் போதனா வைத்தியசாலையில் சிறப்புற இடம்பெற்ற உலக இதய நாள் நிகழ்வுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ் போதனா வைத்தியசாலையில் அண்மையில் உலக இதய நாள் நிகழ்வுகள் (World Heart Day) நடைபெற்றது.

யாழ் போதனா வைத்தியசாலை இதய சிகிச்சை பிரிவு வட பகுதியில் உள்ள அனைவருக்குமான பல்வேறு சிகிச்சைகளை வழங்கி வருகிறது. வடபகுதிக்கு அப்பால் திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம் போன்ற மாவட்ட மக்களும் இங்கே சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் 2500 பேருக்கு Angiogram செய்யப்படுகிறது. அத்துடன் 1000 பேருக்கு stenting செய்யப்படுகிறது. இது எமது வைத்தியசாலையின் ஒரு பாரிய சேவையாகும். இப்பகுதி மக்களுக்கு கிடைத்த ஒரு பெரும் கொடையாகும்.

நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறான வசதிகள் இல்லை இவ்வாறு பல சேவைகளை யாழ் போதனா வைத்தியசாலையில் பயன்பெறும் பல லட்சம் மக்கள் இருந்தாலும் வைத்திய சேவையின் அர்ப்பணிப்பை பலர் தெரிந்து கொள்வதாக இல்லை என வைத்தியசாலை பணிப்ப்பாளர் தெரிவித்துள்ளார்.

Share this Article