Tuesday, December 6, 2022

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா

Must Read

யாழ்.போதனா வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட கடற்படை சிப்பாய்க்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது

இவர் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இவர் முன்பு தனிமைப்படுத்தல் காலம் முடிந்து வீடு திரும்பி மீள கடமைக்கு யாழ். வந்தவர்.

குறித்த கடற்படை சிப்பாய் யாழ்ப்பாணத்திற்கு கடமைக்க வந்த நிலையில் அண்மையில் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையின் 7 இலக்க நோயாளிகள் விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.

இங்கு அவருக்கு நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த கடற்படை சிப்பாய் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

விடுதியில் கடமையாற்றிய மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்டவர்களை  தனிமைப்படுத்த வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img