யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 14 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
இதன்படி இன்று 145பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்
- போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் -4 பேர்
- போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் – 7 பேர்
- ஆதார வைத்தியசாலை பருத்தித்துறை-ஒருவர்
- பொது வைத்தியசாலை மன்னார் – 3பேர்
- தனிமைப்படுத்தல் மையம் விடத்தல்பளை- 30 பேர் (13 பேருக்கு தெற்று உறுதி செய்யப்பட்டுள்ளது)
- கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு-30 பேர்
- கிளிநொச்சி நாச்சிக்குடா எழுமாற்றுத்தெரிவு – 30பேர்
- இலங்கை விமானப்படை தனிமைப்படுத்தல் மையம் பூவரசங்குளம் -40 பேர் (ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது)