யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை நினைவாக வைத்தியசாலைக்கு முன்பாகவும் நினைவேந்தல் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டவர்களது 38வது ஆண்டு நினைவுதினம் இன்றுசெவ்வாய்க்கிழமை (ஒக்.21) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்வைத்தியசாலைக்கு முன்பாக அனுஷ்டிக்கப்பட்டது.

1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, வைத்தியசாலையில்கடமையாற்றிய 21 பணியாளர்கள் உட்பட 68 பேரை சுட்டுப் படுகொலைசெய்ததோடு, இந்த தாக்குதலில் பலரும் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 38ஆவது நினைவு தினம்யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நடைபெற்றது. 

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராஜாகஜேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் படுகொலைசெய்யப்பட்டவர்களது உறவினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நினைவேந்தலின்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தோருக்குஅகவணக்கம் செலுத்தப்பட்டு, உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர்தூவி, அஞ்சலி செலுத்தப்பட்டது. 

Share this Article