இந்திய இராணுவத்தினரால் மிலேச்சத்தனமாக சுட்டு படுகொலை செய்யப்பட்டயாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் நோயாளர்களது 38 ஆவது நினைவு தினம் இன்று(ஒக்.21) யாழ் வைத்தியசாலை வளாகத்தில் நினைவு கூரப்பட்டது.

1987 ம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியசாலை பணியாளர்கள் 21 பேர் உள்ளிட்ட 68 பேரை சுட்டு படுகொலை செய்ததமை சுட்டிக்காட்டத்தக்கது.
நினைவேந்தலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந் தோருக்கு அகவணக்கம்செலுத்தப்பட்டு உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்துமலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.

மேலும் குறித்த நிகழ்வில் 1987 ஆம் ஆண்டு உயிர்நீத்த சாரதி வை. சன்முகலிங்கத்தின் நினைவாக அவரது மனைவி சக்கர நாற்காலி ஒன்றினை நன்கொடையாக வழங்கி வைத்தார்.

நினைவு நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிகாரிகள், வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் , சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களின்உறவினர்கள் மற்றும் சம்பவத்தின்போது வைத்தியசாலையில் இருந்தோர் எனபலர் நினைவேந்தலில் கலந்து கொண்டிருந்தனர்.
