யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த மைத்திரிபால சிறிசேன!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மைத்திரிபால சிறிசேன அவர்கள் இன்று (ஜூலை 1) காலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.

மைத்திரிபால சிறிசேன அவர்களை போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி அவர்கள் வரவேற்றார். தொடர்ந்து வைத்தியசாலை செயற்பாடுகளையும், விடுதிகளையும் பார்வையிட்ட அவர் நோயாளர்கள், வைத்தியசாலை ஊழியர்களோடும் கலந்துரையாடினார்.

சுகாதார அமைச்சராக அவர் இருந்த காலப்பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்டு ஜனாதிபதி காலத்தில் திறந்து வைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டட தொகுதியையும் அவர் பார்வையிட்டார்.

இதன்போது இன்று காலையில் பிரசவித்த ஆண் குழந்தையொன்றுக்கு அவர் தனது ஆசீர்வாதங்களை வழங்கியிருந்தார்.

வைத்தியசாலையின் அருங்காட்சியத்தை பார்வையிட்ட மைத்திரிபால சிறிசேன அவர்கள், யாழ் மாவட்ட மருத்துவ துறையின் வரலாறு தொடர்பாக ஆர்வமாக கேட்டறிந்தார்.

Share this Article