யாழ் நூலகத்தால் நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

“உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது“ என்ற தொனிப்பொருளைக் கொண்ட இவ் வருட தேசிய வாசிப்பு மாதத்தில் யாழ் பொதுசன நூலகத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கும் வைபவம் இன்று(நவம்பர் 19) காலை யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநரின் செயலாளர் மு. நந்தகோபாலன் கலந்து சிறப்பித்தார். போட்டிகளில் பங்குபற்றியோருக்கான பரிசில் வழங்கல் மற்றும் கலை நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெறமை குறிப்பிடத்தக்கது.

Share this Article