யாழ்ப்பாணத்திலுள்ள சிறிய தீவுகளில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கட்டமைப்புகளை நிர்மாணிப்பதற்காக இந்திய ஒப்பந்ததாரர்களிடமி ருந்து மட்டும் விலைமனுக் கோரலை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் குடியிருப்போருக்கு மின்சாரம் வழங்குவதற்காக 11 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியனுசரணையை இலங்கை அரசுக்கு வழங்குவதற்கு இந்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கமைய குறித்த கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக இந்திய ஒப்பந்ததாரர்களிடமிருந்து மட்டும் விலைமனு கோரப்பட்டுள்ளது.
அதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை மதிப்பீட்டுக்கு உட்படுத்தி அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தர பெறுகைக் குழு சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் குறித்த ஒப்பந்தத்தை U-Solar Clean Energy Solutions (Pvt) கம்பனிக்கு வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப் பித்த யோசனைக்கு அமைச்சரவை அங் கீகாரம் வழங்கியுள்ளது.