யாழ் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வேத மகளிர் தின நிகழ்வுகள் இன்று (மார்ச் 15) இடம்பெற்றது.
யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் இன்று காலை 9 மணியளவில் இந் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பால்நிலை சமத்துவத்துக்கான புதுமை தொழிநுட்பம் எனும் கருப் பொருளில் 2023 ஆம் ஆண்டுக்கான மகளீர் தினம் இடம்பெற்றது.
இதன்போது பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்படன. இதேபோல் இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினியின் வுவுனியா மவட்ட ஊடகவியலாளர் திவ்யந்தினிக்கும் விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ் மாவட்ட செயலர் சிவபாலசுந்தரன், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாண கலாச்சார மண்டப முன்றலில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்குமாகாண மகளீர் விவகார அமைச்சு மற்றும் வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களமும் இணைந்து நடாத்திய மகளீர் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது.