யாழ் மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம்இணைந்து நடாத்திய விசேட தொழிற்சந்தை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்கஅதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நேற்றையதினம்(செப்.22) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர்மஹிந்த ஜெயசிங்ஹ அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்றஉறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்புதிணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.ஜி. எச். எச். ஆர். கிரியல்ல ஆகியோர்கலந்துகொண்டனர்.
இன்றைய தொழிற்சந்தை நிகழ்வில் 1000 இற்கு மேற்பட்ட இளைஞர்கள்யுவதிகள் கலந்து கொண்டதுடன், தொழில் வழங்கும் 40 நிறுவனங்களும்,15 தொழில் பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டதுடன் இளைஞர் , யுவதிகள் தங்களது தகமைக்கு ஏற்ப உரிய நிறுவனங்களில் பதிவுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.