யாழ்ப்பாண மாவட்டச்செயலகத்தில் கைவிஷேசம் வழங்கும் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாண மாவட்டச்செயலகத்தில், தமிழ், சிங்கள புதுவருட தினத்தை முன்னிட்டு கைவிஷேசம் வழங்கும் நிகழ்வு இன்று (ஏப்ரல் 17) இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன் அவர்கள் சகல மக்களிற்கும் இந்தப் புதுவருடம் நல்ல ஆரோக்கியத்தையும், சுபீட்சத்தையும், சௌபாக்கியத்தையும் வழங்கி மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு வழியேற்படுத்த எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.

மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு இன்றைய தினம் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பான சேவையை உத்தியோகத்தர்கள் வழங்க வேண்டுமெனவும் தெரிவித்தார். அத்தோடு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் கைவிஷேசத்தினையும் வழங்கிவைத்தார்.

நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு மாவட்ட செயலரின் ஆசியுடன் கைவிஷேசத்தினை பெற்றுகொண்டனர்.

Share this Article