யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இப்தார் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முஸ்லிம் சமூகத்தின் புனித பண்டிகையான இப்தார் நிகழ்வு யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நேற்றுமுன்தினம்(ஏப்ரல் 11) மாலை 5.00 மணிக்கு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவில் நான்கு மதத்தையும் பிரதிபலிக்கும் பொதுமக்கள் உள்ளடங்கியிருப்பதால் அவர்களது சமயங்களை முன்னிறுத்தி விசேட விழாக்கள் பண்டிகைகளை கொண்டாடுதல் என்ற வகையில் இந்த இப்தார் நிகழ்வு இடம்பெற்றது. 

இந்த நிகழ்விற்கு யாழ் மாவட்ட செயலாளர் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். சர்வமத தலைவர்கள் ஆசியுடன் ஆரம்பித்த இந்நிகழ்வில் யாழ் மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் சார்பில் பல மதத்தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேலும் மாவட்ட செயலக இஸ்லாமிய கலாசார உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

Share this Article