யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமானமருதலிங்கம் பிரதீபன் அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்சிறீதரன் இன்றைய தினம் (நவம்பர்30) அரசாங்க அதிபர் அலுவலகத்தில்சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் மற்றும்இடர்கால நிலை தொடர்பிலும் யாழ் வெள்ளப் பேரிடர்ப் பாதிப்பு மற்றும்எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மக்களுக்கான உடனடி உதவிகளைவழங்கல், காலநிலைத் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்வுக்குத்திரும்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் இயற்கைப்பேரிடர்களை எதிர்கொள்வதற்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில்ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.