யாழ்ப்பாணத்துக் கதலி பறக்கின்றது டுபாய்க்கு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கதலி வாழைப்பழத்தைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் திட்டம் நேற்று (மே 3) யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பதப்படுத்தப்படும் இந்த வாழைப்பழங்கள் டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.

இந்தத் திட்டத்துக்காக 700 விவசாயிகளிடம் இருந்து வாழைக்குலைகள் எதிர்பார்க்கப்பட்டபோதும், 300 விவசாயிகளிடம் இருந்தே வாழைக்குலைகள் கிடைத்துள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் திட்டம் விவசாய அமைச்சின் கீழ் உள்ள விவசாய நவீனமயமாக்கப்பட்ட திட்டத்தின் கீழ் உலக வங்கியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக பதிவு செய்யப்பட்ட சங்கம் ஒன்று உள்ளது என்றும், வாரத்துக்கு 40 ஆயிரம் கிலோ வாழைக்குலைகளைத் தற்போது ஏற்றுமதி செய்ய முடிகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.

10 ஆயிரம் கிலோ வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டால் 12 ஆயிரம் டொலர் வருமானம் ஈட்ட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Share this Article