யாழ்ப்பாணத்தில் நடந்த கோர விபத்தில் கணவன் உயிரிழப்பு – மனைவி படுகாயம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் செம்மணி வளைவுக்கு அண்மையில் இன்று (ஒகஸ்ட் 19) மதியம் நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 26 வயதான அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொக்குவில் கிழக்கைக் சேர்ந்த 31 வயதான பு.மனோஜ் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

மோட்டார் சைக்கிளும், பொலிஸாரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்து நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுது்து வருகின்றனர்.

Share this Article