யாழ்ப்பாணத்தில் திடீரென தோன்றிய பெரும் சிவலிங்கம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் திடீரென தோன்றிய சிவலிங்கத்தை மக்கள் பக்திபூர்வமாக வழிபட்டனர்.

மகா சிவராத்திரி தினமான இன்று(பெப்ரவரி 18) மருதங்கேணி, மாசார் – புதுக்காட்டு வீதிக்கு அருகில் உள்ள முடங்குதீவில் திடீரென சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

இன்று அந்தப் பகுதி மக்கள் சிவலிங்கத்தை அடையாளம் கண்ட நிலையில், அந்தப் பகுதி மக்களும் அயற்பகுதி மக்களும் ஆர்வத்துடன் சென்று சிவலிங்கத்தை பார்வையிட்டு, வழிபட்டணர்.

இந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தவர்கள் யார் என்று தெரியாதபோதும், பொதுமக்கள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டமைக்கு வரவேற்புத் தெரிவித்ததைக் காண முடிந்தது.

Share this Article