யாழ்ப்பாணத்தில் சிறுநீரக தானம் செய்தவரின் பெற்றோர்கள் கௌரவிப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணத்தில் சில மாதங்களுக்கு முன்னர் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சிறுநீரகம் இன்னொருவருக்கு பொருத்தப்பட்டது.

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்த பெற்றோர் அண்மையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

அண்மையில் விபத்தில் உயிரிழந்த தங்கராசா பிரிஞ்சனின் சிறுநீரகம் பெற்றோரின் ஒப்புதலுடன் அவர்கள் விருப்பத்தின் பெயரில் இன்னொருவருக்கு வழங்கியதால் சிறுநீரக செயலிழப்பால் அவதியுற்ற ஒருவருக்குப் பொருத்தப்பட்டது.

அதற்கு சம்மதம் தெரிவித்த பெற்றோர்கள் அண்மையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அதிதிகளாக அழைக்கப்பட்டதுடன், புதிதாக அமைக்கப்பட்டு சிறுநீரக குருதி அமைக்கப்பட்டு சுத்திகரிப்பு பிரிவில் விரிவாக்கம் செய்யப்பட்ட 3 சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திர பகுதி அவர்களால் திறக்கப்பட்டது. சிறுநீரக தானம் செய்தமைக்காக சான்றிதழ் வழங்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் மருத்துவ நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் மருத்துவ பீடாதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this Article