யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகத்துக்கு படகில் சென்ற குடும்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று அகதிகளாக இந்தியாவின் தமிழ்நாடு தனுஷ்கோடி பகுதியை சென்றடைந்துள்ளனர்.

விஜயன் (வயது-46), அவரது மனைவி ரஜினி (வயது-45), மகள் பெந்தினி (வயது-18) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரே படகு மூலம் தமிழ்நாடு சென்றுள்ளனர்.

நேற்றுமுன்தினம் (மே 25) யாழ்பாணத்திலிருந்து புறப்பட்டு மன்னார் பேசாலைகக்குச் சென்று அங்கிருந்து இரவு 8 மணியளவில் புறப்பட்டு அதிகாலை 2 மணிக்கு தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கோவில் பிரதேசத்தில் கரையிறங்கியுள்ளனர்.

நேற்று அதிகாலை அப்பகுதிக்கு ரோந்துசென்ற ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு பொலிஸார் அவர்கள் மூவரையும் கைது செய்து மண்டபம் கடலோர பாதுகாப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாணை செய்து வருகின்றனர்.

கடந்த ஓரிரு வருடங்களுக்குள் இலங்கையில் இருந்து 253 பேர் அகதிகளாக இந்தியாவுக்குச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்டுகிறது.

 

Share this Article