யாழ்பாடி சதுரங்க சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்பாடி சதுரங்க சுற்றுப் போட்டிகள் இன்று(ஏப்ரல் 11) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரி மற்றும் யாழ்.வண்ணை நாவலர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இடம்பெற்றன.

யாழ்ப்பாண பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாக சதுரங்க விளையாட்டில் ஆர்வமுடைய யாழ் மாவட்டத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கில் நடாத்தப்பட்டது.

ஆண் பெண் இருபாலரும் 6,8,10,12,14,16 வயதுப் பிரிவுகளுக்கு மேலுள்ள போட்டியாளர்கள் மிகவும் ஆர்வமாக இப் போட்டிகளில் கலந்து கொண்டனர். இரண்டு நாள்கள் இடம்பெறும் இச் சுற்றுப் போட்டிகள் நாளையும் இடம்பெறவுள்ளது.

Share this Article