யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
யாழ்ப்பாணம் ஓட்டுமடம் – பொம்மைவெளியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம் ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பொம்மைவெளி 5 ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 32 வயது பெண்ணே கைது செய்யப்பட்டார்.
உயிர்க்கொல்லி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக நீண்ட நாள்களாக தேடப்பட்டு வந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
Share this Article