By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: யாழில் விபத்தை ஏற்படுத்திய ஹயேஸ் வாகனம் வீட்டு மதிலை உடைத்து உள்ளே பாய்ந்தது!
Share
Notification
Latest News
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
நெடுந்தீவு
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
யாழ்ப்பாணம்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!
இலங்கைச் செய்தி
பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > யாழில் விபத்தை ஏற்படுத்திய ஹயேஸ் வாகனம் வீட்டு மதிலை உடைத்து உள்ளே பாய்ந்தது!
யாழ்ப்பாணம்

யாழில் விபத்தை ஏற்படுத்திய ஹயேஸ் வாகனம் வீட்டு மதிலை உடைத்து உள்ளே பாய்ந்தது!

Last updated: 2023/09/03 at 10:32 AM
Published September 3, 2023 548 Views
Share
2 Min Read
SHARE

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியில் மோட்டார் சைக்கிளை மோதி விபத்தை ஏற்படுத்தித் தப்பிய ஹயேஸ் வாகனம் சிறிது தூரத்திலேயே வீட்டு மதிலை உடைத்து உள்ளே பாய்ந்தது.

இந்த விபத்து நேற்று (செப்ரெம்பர் 2) இரவு 11.45 மணியளவில் நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் காலில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இருந்து கொக்குவில் நோக்கி அதி வேகமாக பயணித்த ஹையேஸ் வாகனம், கே.கே.எஸ். வீதியில் உள்ள நாச்சிமார் கோயில் முன்பாக உள்ள வளைவில் வீதியின் மறுபுறத்தில் – எதிர்த்திசையில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரை மோதியது.

விபத்தின்பின்னரும் நிறுத்தாது தப்பிச் சென்ற அந்த ஹையேஸ் வாகனம், சிறிது தூரம் பயணித்து, பூநாரி மரத்தடியில் உள்ள வளைவில் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபுறம் உள்ள பாலத்தைப் பாய்ந்து வீட்டுக்குள் புகுந்தது.

accident (3)
accident (2)
accident (1)

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் காலில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஹையேஸ் வாகனத்தில் சுமார் 9 பேர்வரையில் பயணித்தனர் என்று கூறப்படுகின்றபோதும், அதில் இருவரே சம்பவ இடத்தில் காணப்பட்டனர். வாகனத்தைச் செலுத்தி வந்தவர் யார் என்று தெரியாத நிலையில், அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டது.

வாகனத்தில் இருந்தவர்கள் மதுபோதையில் இருந்தனர் என்றும், அதிவேகத்துடனே நகர் பகுதியில் இருந்து இந்த வாகனம் பயணித்தது என்றும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறினார்கள்.

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞருக்குத் தெரிந்தவர்கள் ஹையேஸ் வாகனத்தில் வந்தவர்களை விசாரித்து தாக்க, ஹையேஸில் வந்தவர்களுக்கு தெரிந்தவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பதிலுக்குத் தாக்க அங்கு பதற்றமான நிலைமை காணப்பட்டது.

யாழ்ப்பாணம் போக்குவரத்துப் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து வாகனத்தை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இரவு ஒரு மணி தாண்டியும் வாகனத்தை் மீட்கும் முயற்சிகள் நடந்தவண்ணம் இருந்தன.

விபத்துத் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You Might Also Like

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!

செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!

செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

மகஜர் கையளிப்பு!

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

Anarkali September 3, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article ஆனைக்கோட்டை அடைக்கல மாதா ஆலய முன்றலில் இரத்ததான முகாம்!
Next Article உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

You Might Also Like

யாழ்ப்பாணம்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!

June 30, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!

June 29, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

June 29, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!

June 29, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மகஜர் கையளிப்பு!

June 27, 2025
யாழ்ப்பாணம்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

June 27, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?