வடக்கு மாகாண உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை மேம்படுத்தும் நோக்கில் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துடன் இணைந்து நடாத்தும் வர்த்தகக் கண்காட்சி இன்று(ஒக்ரோபர் 6) காலை 9.00 மணிக்கு யாழ் கலாசார மத்திய நிலையத்தில் ஆரம்பமாகியது.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வட மாகாண சபை பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன காட்சிக்கூடங்களை திறந்து வைத்தார்.
தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லசந்த காரியபெரும, கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ. லக்கதாஸ், கௌரவ ஆளுநரின் செயலாளர் என். நந்தகோபாலன், தொழிற்றுறை திணைக்களப் பணிப்பாளர் வனஜா, மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன், பிரதம கணக்காளர் N.S.R. சிவரூபன், திட்டமிடல் பணிப்பாளர் சி. நிக்கலோஸ்பிள்ளை ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கர், தொழில் முயற்சியாளர்கள், பொதுமக்களெனப் பலரும் கலந்துகொண்டனர்.
ஷ
90 தொழில் முயற்சியாளர்களின் விற்பனைக் காட்சிக்கூடங்களில் உணவு உற்பத்திகள், கடல்சார் உணவுப் பொருட்கள், பனை மற்றும் தும்பு உற்பத்திப் பொருட்கள், ஆடை அணிகலங்கள், கைப்பணிப் பொருட்கள், தோல் உற்பத்திப் பொருட்கள், பாதணிகள், பால் உற்பத்திப் பொருட்கள், மற்றும் பல உள்ளூர் உற்பத்திப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று ஆரம்பமான கண்காட்சி நாளை, நாளை மறுதினமும் காலை 9.00 மணிமுதல் இரவு 8.00 மணி வரை யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது