யாழில் மீட்கப்பட்ட அதி உயர் சக்தி வாய்ந்த வெடிமருந்துகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் குருநகர் துறைமுகப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் நேற்றுமுன்தினம் (ஒக்ரோபர் 16) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், ஒரு கிலோ கிராம் TNT வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குருநகர் துறைமுகப் பகுதியில் வடக்கு கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், அந்தப் பகுதிக்கு அருகிலுள்ள தென்னந்தோப்பு ஒன்றில் சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்று காணப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

இதன்போதே குறித்த பொதியில் சுமார் ஒரு கிலோவும் 950 கிராமும் கொண்ட TNT மற்றும் நூலையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

வெடிமருந்துகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக இந்த அதிக சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இந்த வெடிபொருட்கள் கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article