யாழில் போதைப் பொருள் விற்ற பெண் உட்பட பிரபல பாடசாலை மாணவனும் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகவளாகத்தை  அண்மித்த பகுதியில் போதைப்பொருள்  வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட பெண் யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட காலமாக குடு போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பெண் வியாபாரியிடம் குடு வாங்கி பாவிக்கும் 10 வாடிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்  எனவும்  கைது செய்யப்பட்டோர் 17 தொடக்கம் 22 வயதுக்குட்பட்டவர்கள்  எனவும் தெரியவருகின்றது.
போதைப்பொருள் வியாபாரி நீண்ட காலமாக  போதைப்பொருள்  விற்று வந்தமை தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான அணியினருக்கு   கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடம் சுற்றி வளைக்கப்பட்டு  போதை பொருள் வாங்கியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Share this Article