யாழில் நேற்று சிறப்பாக இடம்பெற்ற ‘மில்லர்’ திரைப்படத்தின் ஆரம்ப விழா!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

.பி.சி தமிழ் தயாரிப்பில் உருவாகவுள்ளமில்லர்திரைப்படத்தின் ஆரம்ப விழாநேற்றையதினம் (ஒக்.26) யாழில் உள்ள தனியார் விருந்தக மண்டபத்தில் பிரமாண்டமாஆரம்பமானது.

.பி.சி தமிழ் ஊடக நிறுவனத்தின் பாஸ்கரன் கந்தையா தயாரிப்பில் ராஜ்சிவராஜ், பூவன் மதீசன் ஆகியோரின் கூட்டு இயக்கத்தில் வெளிவரவிருக்கும் மில்லர் திரைப்படம் ஈழ சினிமாவில் புதிய திருப்பு முனைக்கான முயற்சியாக ஆரம்பவிழா அமைந்திருந்தது.

மில்லர் திரைப்படத்திற்கான பூஜை இந்து மத குருவினால் சிறப்பாக இடம்பெற்று படக்குழுவினரும் ஆசிக்கப்பட்டனர். தொடர்து மத தலைவர்களது  ஆசி உரைகள் இடம்பெற்றதுடன் நடராஜர் நர்த்தனாலய மாணவிகளது அற்புதமான வரவேற்பு நடன ஆற்றுகை அமைந்திருந்தது.

இவ்விழாவில் கவிப்பேர்ரசு வைரமுத்து, இயக்குனர் பாண்டிராஜ் மன்றும் நித்திலன், இயக்குனர், நடிகர் ரஞ்சித் மற்றும் சிங்கம்புலி, தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன்  ஆகிய இந்திய திரையுலக பிரபலங்கள் அரங்கை நிறைத்து வாழ்த்துரைகளையும் வழங்கியிருந்தனர்.

Share this Article