யாழில் சிறுவனுக்கு பியர் பருக்கியவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணத்தில் 10 வயதுச் சிறுவனுக்கு பியர் பருக்கிய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் நேற்று(ஒக்ரோபர் 27) முச்சக்கர வண்டியினுள் வைத்து குறித்த சிறுவனுக்கு பியரினை பருக்கியுள்ளார்.

இது குறித்து சிறுவனின் தாயார் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்த இந்நிலையில், சந்தேகநபரை நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share this Article