யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம் ஒருவர் படுகாயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு குடத்தனைச் சந்திப் பகுதியில் இன்று மதியம் (மார்ச் 21) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒரு பெண் படுகாயம் அடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்  சேர்க்கப்பட்டுள்ளார்.
அம்மன் பகுதியிலிருந்து மணல்  ஏற்றிக் கொண்டு பருத்தித்துறை  நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொறியும்,  பருத்தித்துறை பகுதியிலிருந்து மருதங்கேணி நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
 இதில் மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியைச் சேர்ந்த சின்னையா  கணேசன் சிங்கம் (வயது 44)எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவரோடு கூட வந்த பெண் பிள்ளை(மகள்) தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டதுடன் விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share this Article