யாழில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட சிறுவர் இல்லத்திலிருந்து சிறுவர்கள் மீட்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம், இருபாலையில் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

கிறிஸ்தவ சபை ஒன்றால் நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் ஒன்றே கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டது.

அங்கிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவ அறிக்கைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்படவுள்ளனர்.

கோப்பாய் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறுவர் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் தங்களுக்கு உரிய உணவு வழங்கப்படவில்லை என்றும், துன்புறுத்தல்கள் நடந்தன என்றும் கூறியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article