யாழில் இளைஞர்களுக்கு இடையிலான அனுபவ கல்வி பரிமாற்ற நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
வடக்கு – தெற்கு இளைஞர்களுக்கு இடையிலான அனுபவ கல்வி பரிமாற்ற நிகழ்வு ஒன்று நேற்று(மார்ச் 25) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் இறுதியில் ஊடக சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது.
இலங்கையின் 15 மாவட்டங்களில் இருந்து வருகை தந்த அமைப்புக்களின்  உறுப்பினர்கள், நிலை மாறு கால நீதி தொடர்பாக யுத்தத்தின் பின்னர் யாழ். மாவட்டத்தில் எவ்வாறான நிலமை காணப்படுகிறது என்பது தொடர்பாக மூன்று நாட்கள் கள விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த களவிஜயம் தொடர்பில் இறுதி அறிக்கை மற்றும் கலந்துரையாடல் என்பன யாழ்ப்பாண பொது நூலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன் போது இராணுவமாக்கப்பட்டுள்ள மக்களின் குடியிருப்புகள், விடுவிக்கப்படாத காணிகள் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this Article