யாழில் இலவச கண் பரிசோதனை முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்.மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பிரதேசங்களில் வாழ்ந்து வரும் கண்புரை (Cataract) சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ள நோயாளிகளுக்கு,யாழ்.போதனா வைத்தியசாலையில், நன்கொடையாளர்களின் உதவியுடன் முற்றி லும் இலவசமாக கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேற்படி சிகிச்சைக்கான நோயாளர்களைத் தெரிவு செய்யும் கண்பரிசோதனை முகாம், நாளை மறுதினம் (மே 20) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் வட்டுக்கோட்டைப் பிரதேச வைத்தியசாலையி லும், கைதடி ஆரம்ப சுகாதார மருத்துவப் பிரிவிலும் நடைபெறவுள்ளது.

எனவே கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ள நோயாளர்கள், மேற்படி கண்பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு, தமது பெயர்களைப் பதிவு செய்யுமாறு, யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலா நிதி கேதீஸ்வரன் கேட்டுள்ளார்.

Share this Article