தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்தல் செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட ஈ அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றுமுன்தினம் (ஒக்.24) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது
இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்,
பாடசாலை சிறுவர் குழுக்களை ஸ்தாபித்தல் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் தொடர்பாக அறிவும் ஆற்றலும் அனுபவம் வாய்ந்தவர்களாக அதிபர்கள் காணப்படுவதாகவும், பாடசாலை சிறுவர் குழுக்களை ஸ்தாபித்தல் மற்றும் அவற்றின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் ஒரே வகையான தன்மை காணப்படுவதில்லை என்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக எழுகின்ற சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் மாவட்ட ரீதியில் ஒரே நடைமுறையினைப் பின்பற்றும் நோக்கில் பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களை ஸ்தாபிப்பதில் பாடசாலைகளிடையேயும் பல்வேறு இடர்பாடுகள் காணப்படுவதாகவும் தெ ரிவித்ததோடு நேற்றைய தினம் (ஒக்.23) நடைபெற்ற சிறுவர் அபிவிருத்திக் கூழு கூட்டத்தில் பிரதேச மட்டத்தில் தீர்க்க முடியாத பிரச்சினைகளை ஆராய்ந்து மாவட்ட மட்டத்தில் தீர்ப்பதற்கு முடிவெடுக்கபட்டது
.
பிரதேச மட்டத்தில் தீர்க்கக் கூடிய பிரச்சினைகளும் மாவட்டத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அதனைத் தீர்ப்பதற்கு ஒவ்வொரு வலய ரீதியாகவும் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச மட்ட கூட்டத்தை நடாத்துவதுடன் கோட்டக்கல்விப் பணிப்பாளரும் சிறுவர் பாதுகாப்புடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களும் அதில் கலந்து கொள்வதன் ஊடாக சரியான முடிவுகளை எடுக்கக்கூடியதாக இருக்குமெனவும் இதன் மூலமாக யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் சிறுவர் பாதுகாப்பு சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் ஒரே வகையான நடைமுறையை பின்பற்றக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தாா்.
மேலும் பாடசாலைகளில் முறைப்பாட்டுப்பெட்டி வைக்கும் போது முறைப்பாட்டுப்பெட்டியின் பாதுகாப்பிற்கு மேலதிகமாக மாணவர்களின் பாதுகாப்பு கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் சிறுவர்களை ஆற்றுப்படுத்தக்கூடிய பொறுப்பு பாடசாலைக் கட்டமைப்பிற்கு உண்டு என்றும்
சிறுவர் பாதுகாப்புக் குழுக்களில் பாடசாலை மாணவர்களே தலைவர், செயலாளராக இருக்கவேண்டும் எனவும் அதற்கான சரியான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் அதிபர் ,ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் பிள்ளைகள் தமக்குள்ள அதிகாரத்தை அதிகமாக பயன்படுத்துவதாகவும் இதனால் பாடசாலைக்குள் முரண்பாடுகளை ஏற்படுவதாகவும் அதற்கு ஒரே மாதிரியான ஒரே வகையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் எனவும் கேட்டுக்கொண்டாா் .
இதில் 2024 ஆம்ஆண்டு பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களின் மதிப்பீட்டில் பங்கு பற்றிய வடமராட்சி வலயத்தில் 07பாடசாலைகளுக்கும், வலிகாமம் வலயத்தில் 24 பாடசாலைகளுக்குமாக மொத்தம் 31 பாடசாலைகளுக்கு சான்றிதழ்கள் அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டது.
இச் செயலமர்வில் சிறுவர் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் கட்டுக்காவல் சட்டங்கள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஐ. கனகராஜ் மற்றும் விசேட தேவைக்குட்பட்ட சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக உபஅதிபர் .சு.இக்னேசியஷ் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் செயற்பாடுகள் தொடர்பாக சங்கானை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோா் வளவாளர்களாக கலந்து கொண்டு தெளிவூட்டல்களை வழங்கியிருந்தனர்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையி்ன் மாவட்ட , பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பாடசாலை அதிபர்கள், உப அதிபர்கள் ,ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.