மூன்று வாள்களுடன் ஐந்து சந்தேகநபர்கள் மானிப்பாய் பொலிஸாரால் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூன்று வாள்களுடன் ஐந்து சந்தேக நபர்கள் மானிப்பாய் பொலிஸாரால் நேற்று(மார்ச் 18) சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்ட வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த முதியவர் இருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இருவரிடமும்  முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் சுடலையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு வாள்கள் மீட்கப்பட்டிருந்தன.
மேலும் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மானிப்பாய் நகர் பகுதியிலுள்ள கம்மாலை ஒன்றில் வாளை தயாரித்த கம்மாலை உரிமையாளர் ஒருவரை கைது செய்த நிலையில் குறித்த நபரிடமும் ஒரு வாளை கைப்பற்றியிருந்தனர்.
கம்மாலை உரிமையாளருக்கு  உதவி புரிந்த இளைஞர் ஒருவரையும் வாள்வெட்டிற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை உதிரிப்பாகங்களாக்கி மறைத்து வைத்திருந்த ஒருவருமாக மொத்தம் ஐந்து பேரை பொலிஸார் கைதுசெய்தனர்.
அத்தோடு வாள்வெட்டு சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும்  கைப்பற்றியுள்ள நிலையில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளது.
Share this Article