மூன்று உணவுப் பொருட்களின் விலையை குறைத்த சதொச!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில் நேற்றுமுன்தினம்(நவம்பர் 2) முதல் மூன்று உணவுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் கடலையின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 540 ரூபாவாக புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாசிப்பயறு ஒரு கிலோகிராமின் விலை 77 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 998 ரூபாவாகும்.

அத்துடன், 400 கிலோகிராம் பால்மாவின் விலை 22 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 948 ரூபாவாகும் என சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share this Article