முல்லைத்தீவு மாவட்ட செயலக்தில் Save the Children நிறுவனத்தின் மனிதாபிமான செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (ஜூன் 16) மாவட்ட செயலக அரியாத்தை மாநாட்டு மண்பத்தில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடல் பதில் அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் தலைமையில் காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளைக் கொண்டுள்ளோர், சுகாதர பாதுகாப்பு தேவையுடையோர், வன்முறையால் பாதிக்கப்பட்டோர், சிறுவர்கள் முதலானோருக்கு மூன்று மாதங்கள் மாதாந்தம் பத்தாயிரம் ரூபாய் Save the Children நிறுவனத்தின் மனிதாபிமான செயற்றிட்டத்தின் ஊடாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மூவாயிரம் பயனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பயனாளர் தெரிவு மற்றும் தரவு திரட்டல் பிரதேச செயலகங்களினூடாக இடம்பெற்று இறுதியாக மாவட்ட செயலகத்தின் விசேட குழுவினால் தெரிவுசெய்யப்படும்.
இன்றைய இந்த நிகழ்வில் மாவட்ட உதவித்திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் , பிரதேச செயலாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், Save the Children நிறுவனத்தின் அதிகாரிகள் முதலானோர் கலந்து கொண்டனர்.